Sunday, December 20, 2009

அவதார் - Avatar


ஓர் சில திரைப்படங்களைப் பார்த்ததும் ஏதோ வேறுலகம் சென்று திரும்பியது போன்றவோர் உணர்வு ஏற்படுவதுண்டு. திரைப்பட இயக்குனர் எம்மை மறந்து தன்னுடைய திரைப்படத்தை இரசிக்கச் செய்கின்றாரோ அதுதான் அவரது வெற்றி. அந்த வகையில் இதயத்தை வருடுகின்ற தென்றல்போல் எங்கள் உணர்வுகளை தொட்டுச்சென்ற திரைப்படம் "அவதார்". The story of an ex-Marine who finds himself thrust into hostilities on an alien planet filled with exotic life forms. As an Avatar, a human mind in an alien body, he finds himself torn between two worlds, in a desperate fight for his own survival and that of the indigenous people.

வழமையாக ஆங்கிலத் திரைப்படங்களில் மனிதர்கள் வேற்றுலகவாசிகளை எதிர்த்து வெற்றி காண்பது போன்றே திரைக்கதை அமைந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் வழமைக்கு மாறாக மனிதர்களால் வேற்றுலகவாசிகளுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துக்காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். குறிப்பாக அமெரிக்கர்கள் வேற்று நாடுகளை அந்த நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காக தம் வசப்படுத்துவதையும் இயக்குனர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இயக்குனர் James Cameron இதுவரை இயக்கிய Titanic, Terminator, Terminator 2 போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன. அதைப்போல இந்தத் திரைப்படமும் புகழ்பெறும் என்பதில் ஐயமில்லை.


The concept of Avatar has been taken from Hinduism. Hindu Saints were able to transfer a soul from a body to a different body. In the computer world, Avatar is a character that the user wants to be. இந்து சமயத்தில் கூடு விட்டு கூடுபாயும் வித்தைகளை முனிவர்கள் அறிந்திருந்ததாக நாம் படித்திருக்கின்றோம். இந்தத் திரைப்படத்தில் உடல் விட்டு உடல் பாயும் இயத்திரத்தின் மூலம் கதாநாயகன் ஆதிவாசிகள் போன்ற உடலுக்குள் தாவிவிடுகின்றான். இதன்மூலம் பலம் பொருந்திய உடலுடன் காட்டுமிருகங்களை போரடவும் ஆதிவாசிகளின் பழக்கங்களை பழகவும் அவனால் முடிகின்றது. "அவதார்" என்ற ஆங்கில வார்த்தையும் இந்து சமத்திலிருந்தே வந்தது என்பதும் இங்கே குறிப்பிடக்கூடிய விடயம்.


தமிழ்த் திரைப்படம் ஒன்றும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை மையமாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்நத் திரைப்படத்தில் பிரபு நடித்திருந்தார். ( பெயர் தெரிந்தால் அறியத்தாருங்கள்). ஆனால் அவதார் திரைப்படம் காட்சியமைப்பில் தொடமுடியாத சிகரங்களைத் தொட்டிருக்கின்றது. சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என்று அனைத்தும் அழகாக திரையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. The graphics were beyond a human being’s imagination limits, the director’s efforts are apparent through the screen play. The animations make you wonder if such an ecosystem and indigenous people actually exist. All I could say is “James Cameron is a LEGEND”.


Monday, December 14, 2009

வெளிவரவிருக்கும் தோல்விப்படங்கள்: வேட்டைக்காரன் மற்றும் அசல்

தமிழ்த் திரைப்படங்களில் அண்மையில் வரவிருக்கும் திரைப்படங்களில் அனைத்துமே தோல்வியடையும் என்றே தோன்றுகிறது. ஒரு ரசிகனாக என்னுடைய அலசல்... யாரையையும் சீண்டுவதற்காக அல்ல.

வேட்டைக்காரன்


நடிகர் விஜய் இப்போது வெற்றிப்படங்களில் நடிப்பது இல்லை என்று கங்கணம் கட்டி நிற்கின்றார். அழகிய தமிழ் மகன் திரைப்படப்பாடல்கள் வெற்றியடைந்தும் திரைப்படம் தோல்வியடைந்தது. வில்லு திரைப்படப்பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. "சோல்ஜர்" எனப்படுகின்ற இந்தி திரைப்படத்தை மூலமாகக் கொண்டிருந்தும் தோல்வியை தழுவியது வில்லு. வேட்டைக்காரன் திரைப்படத்தில் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்தால், வித்தியாசத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் இவர். இந்தப்படத்தில் பாடல்களில் ஆங்கில சிங்கள பாடல்களின் பாதிப்பு தெரிகிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாய்ப்புக்கள் இல்லை.

http://www.youtube.com/watch?v=yOHa_jreh88

அசல்


நடிகர் அஜித், சரண், பரத்வாஜ் கூட்டணியில் வருகின்ற நான்காவது திரைப்படம். அமர்க்களம், அட்டகாசம், காதல் மன்னன் ஆகிய திரைப்படங்கள் வெற்றிபெற்றிருந்தன. ஆனாலும் You are good as your last game என்பதுபோல சரண் இறுதியாக இயக்கிய மோதிவிளையாடு மற்றும் வட்டாரம் ஆகிய திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. அதேபோல் அஜித்தின் ஏகன் திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. பரத்வாஜ் என்ற இசையமைப்பாளர் இருப்பதையே நம்மில் பலர் மறந்துவிட்டோம். ஆகவே இந்தத் திரைப்படமும் தோல்வியைத் தழுவப்போகிறது.


ஆயிரத்தில் ஒருவன்


Once again, you are good as your last game. இந்தத் திரைப்படம் வரலாறு விஞ்ஞானம் என்று வித்தியாசமான பாதையில் பயணிப்பதால் வெற்றியடைய வாய்ப்புக்கள் இருந்தாலும் செல்வராகவனின் நேரடித் தமிழ்த் திரைப்படம் தோல்வியைத் தழுவியதை நினைவு கூரவேண்டும். யுவனுடனான மோதலினால் வழமையான செல்வராகவனின் திரைப்படப் பாடல்கள்போல் இந்தப்பாடல்கள் இல்லை என்றே கூறவேண்டும். இந்தத் திரைப்படமும் தோல்வியடையவே வாய்ப்புக்கள் அதிகம்.

காலம் பதில் கூறட்டும்!