Saturday, February 10, 2007

ஈன்ற பொழுதினில்....

கடந்த 'சிட்னி சட்னி' பதிவுக்கு தங்களுடைய கருத்துக்களை
அறியத்தந்த நண்பர்களுக்கு நன்றிகள். அனைத்து
பல்கலைக்கழகங்களும் இணைந்து கலைநிகழ்வு ஒன்றை
நடாத்துவது நல்ல விடயமாக பலரும் கருதுகிறார்கள். தொடர்ந்தும்
உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

நிற்க, புலம்பெயர்ந்த நாடுகளில் இளைஞர்களும் யுவதிகளும்
பெற்றோர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்களா? இல்லை போதியளவு
சுதந்திரம் கொடுக்கப்படுகிறதா?

ஆறடியாய் இருந்த பாவடையும் பெண்ணின் கூந்தலும்
அரையடியாய் மாறுகிறது. இவ்வாறு மாற்றத்தைக் காண்பது
பெண்கள். ஆண்கள் அன்று இருந்ததுபோலவே இன்றும்
இருக்கிறார்கள், பெற்றோரை மதிக்கிறார்கள். அதனால்தான்
பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கு அதிக இடம் கொடுக்கிறார்கள்
என்று ஒருசாராரும் கலாச்சாரத்தின் பிம்பங்களாக பெண்கள்
இருக்க, எம் அடையாளங்களை மறந்து மது, மாது என்று
அலைபவர்கள் அழிபவர்கள் ஆண்கள். அதனால்தான் பெற்றோர்
பெண்பிள்ளைகளுக்கு அதிக இடம் கொடுக்கிறார்கள் என்று
ஒருசாராரும் கருத்துத்தெரிவிக்கிறார்கள். இதிலே சிந்திக்க வேண்டிய
விடயங்கள்:
  • தலைமுறை இடைவெளி (intergeneration gap)
  • காலாச்சார மாற்றங்கள்
  • தனிமனித பண்பு
இந்த விடயத்துடன் தொடர்புடைய விவாதமொன்று வருகின்ற
வாரங்களில் அவுஸ்ரேலிய தேசிய வானொலியின் தமிழ்
நிகழ்ச்சியில் நடைபெற இருக்கிறது. உலகளாவிய தமிழ் நேயர்கள்,
http://www.sbs.com.au/tamil என்கின்ற இணையத்தளத்தில்
கேட்கலாம். உங்கள் கருத்துக்களை, பின்னூட்டத்தின்( comments)
மூலம் அறியத்தாருங்கள்.

No comments: