Monday, November 21, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்


இரும்பாய் இருந்த இதயத்தில்
குறிஞ்சி மலராய் பூத்தவளே
இருண்ட எந்தன் தேசத்தில்
முழுநிலவாய் உதித்தவளே
வீசும் காற்றிலும்
கேட்கும் பாட்டிலும்
திரும்பிய திசையிலும்
திரும்பாத நொடியிலும்
தெரிவது நீயடி

எந்தன் மொழியை
எந்தன் இசையை
எனக்கே அறிமுகம் செய்தவளே
எந்தன் மண்ணின்
எந்தன் தாயின்
அருமை புரிய வைத்தளே
உந்தன் தமிழால்
உந்தன் கவியால்
உந்தன் சிரிப்பால்
உந்தன் பேச்சால்
எனது மதுரை
எரியுதடி

எந்தன் நேசம் சொல்ல
நேரம் போதவில்லை
உண்மை தெரிந்துகொள்ள
உனக்கும் காலம் இல்லை
கலைந்து போகும் மேகமாய்
கடந்து நீ சென்றாலும்         
காலங்கள் உள்ளவரை
நீயொரு தேவதை

கடலின் இசையில் கலந்தவன்
அலைகளின் ஓசையை வெறுக்கிறேன்
அன்று நிலவின் ஒளியை ரசித்தவன்
இன்று நிலவிலும் உன்முகம் பார்க்கிறேன்
மலையிலும் காட்டிலும் திரிந்தவன்
மனச்சிறையில் வாடிக்கிடக்கிறேன்

உன்னோடு கைகோர்த்து ரசித்த கடலும்
உன்னோடு இணைந்து லயித்த நிலவும்
அழகோடு உறவாடும் அந்திப் பொழுதும்
இந்த வாழ்வின் எல்லைவரை நீளாதா
இறைவா இன்னோர் பிறவிவேண்டாம்
இந்தப் பிறவியே எனக்குப்போதும்
இறைவா இன்னோர் மையல் வேண்டாம்
இந்த நினைவுகளே என்றும் போதும்



Thursday, November 17, 2011

அழியாத நினைவுகள்



சாதனைகள் படைத்த நெஞ்சமடி
சோதனையால் நெஞ்சு கெஞ்சுதடி
வேதனைகள் என்னை கொஞ்சுதடி
வாலிபமோ என்னைக் கொல்லுதடி


காலிலே செருப்பானேன் நீ நெருப்பானாய்
காதிலே இசையானேன் நீ வெறுத்திட்டாய்
கனிவான சிரிப்பானேன் நீ எரித்திட்டாய்
கனவிலும் தேடினேன் நீ கலைந்திட்டாய்


கொடியிடை நீயென்று பின் நடந்திட்டேன்
செடியிலே மலரின்றி கொந்தளித்தேன்
அடிமீது அடிவைத்து மலையடைந்தேன்
அணுகுண்டு மலைவீழ்ந்து மரணித்தேன்


இறந்த பின்னும் உனக்காய் பிறப்பேன்
இல்லையென்றால் மீண்டும் இறப்பேன்
இறப்பில்தான் நீ கிடைப்பாய் என்றால்
இறந்துகொண்டே இருப்பேன்