Monday, November 21, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்


இரும்பாய் இருந்த இதயத்தில்
குறிஞ்சி மலராய் பூத்தவளே
இருண்ட எந்தன் தேசத்தில்
முழுநிலவாய் உதித்தவளே
வீசும் காற்றிலும்
கேட்கும் பாட்டிலும்
திரும்பிய திசையிலும்
திரும்பாத நொடியிலும்
தெரிவது நீயடி

எந்தன் மொழியை
எந்தன் இசையை
எனக்கே அறிமுகம் செய்தவளே
எந்தன் மண்ணின்
எந்தன் தாயின்
அருமை புரிய வைத்தளே
உந்தன் தமிழால்
உந்தன் கவியால்
உந்தன் சிரிப்பால்
உந்தன் பேச்சால்
எனது மதுரை
எரியுதடி

எந்தன் நேசம் சொல்ல
நேரம் போதவில்லை
உண்மை தெரிந்துகொள்ள
உனக்கும் காலம் இல்லை
கலைந்து போகும் மேகமாய்
கடந்து நீ சென்றாலும்         
காலங்கள் உள்ளவரை
நீயொரு தேவதை

கடலின் இசையில் கலந்தவன்
அலைகளின் ஓசையை வெறுக்கிறேன்
அன்று நிலவின் ஒளியை ரசித்தவன்
இன்று நிலவிலும் உன்முகம் பார்க்கிறேன்
மலையிலும் காட்டிலும் திரிந்தவன்
மனச்சிறையில் வாடிக்கிடக்கிறேன்

உன்னோடு கைகோர்த்து ரசித்த கடலும்
உன்னோடு இணைந்து லயித்த நிலவும்
அழகோடு உறவாடும் அந்திப் பொழுதும்
இந்த வாழ்வின் எல்லைவரை நீளாதா
இறைவா இன்னோர் பிறவிவேண்டாம்
இந்தப் பிறவியே எனக்குப்போதும்
இறைவா இன்னோர் மையல் வேண்டாம்
இந்த நினைவுகளே என்றும் போதும்



No comments: