இன்றைய தினம் நடைபெற்ற மெல்பண் Common Wealth Games 2006இன் நிறைவு நிகழ்வில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். ஐஷ்வர்யா ராய், ராணி முகர்ஜி, சோனு நிகாம், ஸ்ரேயா கோஷல் போன்றோர் கலந்து கொண்டார்கள். Common Wealth Games 2010 இந்தியாவில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்பு நிகழ்வு அரங்கேறியது.
ஆனால், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்க, ஒரு தமிழ் கலைஞன் கூட அழைத்து வரப்படவில்லை. தமிழும் இந்தியாவிலேதானே தோன்றியது, தமிழுக்கு தாயகம் தமிழகம் தானே?... தமிழர்கள் என்றால் அங்கிகரிக்கப்படத் தேவையில்லாதவர்கள் கேவலமானவர்கள் என்ற எண்ணமே அந்த நிகழ்வின் மூலம் நிருபிக்கப்பட்டது.
கலாச்சார வளம் கொழிக்கும் தமிழர்களின் ஒரு கலைவடிவம் கூட அரங்கேற்றப்படவில்லை என்பதும் மனதைத் தாக்குகிற ஓர் விடயம். இந்தியா, கலைகளின் களஞ்சியம் என்று விளம்பரப்படுத்தப்பட்டபோது தமிழ் என்ற வாசனையே அதிலிருந்து அகற்றப்பட்டிருப்பது, தமிழுக்கான புறக்கணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இது என் கருத்து. உங்கள் கருத்து என்ன? நீங்களும் பின்னூட்டத்தில் அறியத் தாருங்கள்.
No comments:
Post a Comment