வணக்கம்...
நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் வலைப்பதிவு ஒன்றில் சந்திக்கின்றேன். கவிஞர் கண்ணதாசன் சொன்னதுபோல 'நாம் பணத்தை மட்டும் சேர்ப்பதில்லை, அனுபவங்களையும் சேர்க்கிறோம். அவற்றைப் பதிந்துகொள்ள நான் கிறுக்குபவற்றை எழுதிக்கொள்ள ஓர் களமாக இந்த வண்டிசை பாடும் எழில் வசந்தப்பூங்காவில் பயன்பட இருக்கின்றது. ஆரம்பதிற்கு ஓர் சில குறுங்கவிதைகள்:
இதமான உறவுகள் புரியவில்லை இதயம் மரத்துவிட்டதோ - இல்லை
இன்னும் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது
வாழ்வின் வழிகளைத் தேடித்தேடி
விழிகள் தொலைந்து போனதடி
உலகிலே அமைதியைத் தேடித்தேடி
உள்ளம் தொலைந்து போனதடி
தமிழ்பேசும் குழந்தையைத் தேடித்தேடி
தாயகவுணர்வு தொலைந்து போனதடி
என் வாழ்வின் வில்லனும் நானே...
வில்லனை வெல்லும் நாயகனும் நானே...
-S-
2 comments:
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்!
வருக வருக!
நன்றி...
Post a Comment