Thursday, February 23, 2012

எனக்கும் காதல் வந்தது


கருவறையின் சுவரை 
தட்டிப் பார்த்தேன்
முட்டிப் பார்த்தேன்
மோதிப் பார்த்தேன்
திறக்கவில்லை
நீண்டதொரு யுத்தம்
இரத்தச் சகதியில்
இன்னுமொரு பிறப்பு
தொப்புள்கொடி நோ
தீருமுன்னே
வாரியணைத்தாள் அன்னை
முத்தமிட்டாள் என்னை
பித்தம் கொண்டேன்
தாய் மீது
தாய்மை மீது
எனக்கும் காதல் வந்தது 

சிறகொடிந்த பறவையாய்

புலம்பெயர்ந்து
அகம் இழந்து
மொழி தொலைந்து
எதிலியானோம்

சொந்தங்கள் 
சொர்க்கத்தில்
சொந்த பூமியோ
நரகத்தில்

விடிவு வரும்
நாளையென்று
வாடித்தவித்து
வருடங்கள் ஓடுதடி

தமிழ் மறந்து
தாயகம் துறந்து
தெரியாத தேசத்தில்
புரியாத வாழ்க்கை

கணணியில் கண்டு
கணவனும் மனைவியும்
காலந் தள்ளும்
கேவலங்கள்

காதலும் காமமும்
சங்கமிக்கும்
முடிவிலியில்
கலாச்சாரம்

அடையாளம் தெரியாத
விதிமுறைகள் பிழையான
அவசர உலகத்தில்
அகதியாய் எம் வாழ்வு

Thursday, February 09, 2012

நள்ளிரவில் உந்தன் சொப்பனங்கள்

அழகிய இரவு
தொலைவினில் நிலவு
தாலாட்டும் இசை
மகிழ்ச்சியில் இவ்வுலகு

பறவைகள் இல்லை
ஒலியற்ற நிசப்தம்
விண்மீனோடு வெளிச்சம்
உறைகின்ற பொழுது

வானில் வெண்ணிலா
எங்கே என் நிலா
திரை மறைவில் நீ
திசை தெரியாமல் நான்

அலையோசை தூரத்தில்
அவள் உறங்கும் நேரத்தில்
தமிழோடு உறவாடும்
எந்தன் விரல்கள்..