
இப்பத்தான் பட்டியல் படம் பார்த்தேன். இணையத்தில் முதல் முறையாக, சுடச்சுட ஒரு பட விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆசை. (ஆசைகள் எத்தனை? இது என்ன கறுமமான ஆசையோ?) அதான் சுடச்சுட... இதோ பட்டியல் திரை விமர்சனம்.
பிதாமகன், தளபதி, சோலே போன்ற படங்களின் பாதிப்புடன் உருவாகி இருக்கும் திரைப்படம் இது. இரண்டு நண்பர்கள், ஆதரவு அற்றவர்கள். ஒருவர் காது கேட்காதவர். பேசவும் முடியாதவர் (பிதாமகன் விக்ரம் போல). மற்றவர் நகைச்சுவையான, ஆனால் ஆண்மைத்துவமான இளைஞன். இவர்கள் வாழ்வில் இரண்டு பெண்கள்( பூஜா மற்றும் 'தவமாய் தவமிருந்து' புகழ் பத்மபிரியா) ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்பதை அழகாக காதல், நட்பு என்ற போர்வையில் செதுக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன்( 'அறிந்தும் அறியாமலும்' இயக்குனர்).

இந்தப் படத்திலேயே, சிறந்தது என்றால் இசை. யுவன் உண்மையிலேயே இளைய இசைஞானிதான். குறிப்பாக, இளையராஜாவின் குரலையே போதை ஏற்றி கொண்டாட விட்டிருக்கிறார். "நாயகன்" திரைப்படத்தில் வந்த "நிலாவது வானத்து மேல" பாடல் பாணியில், "நம்ம காட்டில பாட்டும்" அருமை. "கண்ணை விட்டு கண்ணிமைகள் விடை கேட்டால்" "ஏதேதோ எண்ணங்கள் வந்து" பாடல்கள் எமை மெய்மறந்து சிலிக்க வைக்கின்றன. திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும், ரீங்காரம் இடுகின்றது திரைப்படத்தை இயக்குனர் நிறைவு செய்த விதம். பட்டியல் உண்மையில் சுத்தியல்.( என்ன சுத்தியல் எண்டு கேக்கிறீங்களா?... விமர்சனம் எழுதினா, இப்பிடி ரைமிங்கா முடிக்கிறதுதான் ஸ்ரைல்.)
6 comments:
நானும் பார்த்தேன், காதுகேளாதவர் கடைசியில் நன்பன் சாவுக்காக ஆடும் போது, அடிக்கும் சாவுமேளத்தை காதில் கேட்டதுமாதிரி, சத்தம் அதிகரிக்க அதிகரிக்க துள்ளிக்குதித்து ஆடுவது டைரக்ஷனில் ஒரு சருக்கல்தான் ஆனால் காட்சிக்கு அந்த சொதப்பல் அவசியமானது தான். மற்றபடி திரைக் கதை அருமை.
உண்மை... ஆனால் இது இயக்குனரின் இரண்டாவது படம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சில காட்சிகள் மனதைத் தொடா விட்டாலும், சறுக்கல்களா என்பது சந்தேகமே?.. நன்றி..
//ஆனால் ஆண்மைத்துவமான இளைஞன்//
அப்பிடியெண்டால் என்ன? என்ன மாதிரி இருப்பார்.. ஏதாவத விசேட குணங்கள் இருக்கோ எண்ட கேள்விகளுடன்..
இது இயக்குனரின் 3வது படம், முதல் படம் குறும்பு.
எலே தம்பி செந்தூரன், நாந்தேன் படத்தயாரிப்பாளர்லே, என்னோட கைக்காசப் போட்டு எடுத்த படத்துல குறைகண்டுபிடிச்சா சுத்தியல் தான் தம்பி உமக்கும்.
நன்றி சயந்தன்... ஆண்மைத்துவம் எண்டால் என்ன மாதிரி... இல்லாட்டி உங்கள மாதிரி.. (lol) இல்லை.. அவருடைய கம்பீரமான, முரட்டுத்தனமான நடிப்பைச் சொன்னேன்.
பெயரற்ற நண்பரே, குறும்பு நவ்தீப் தெலுங்கில் நடித்த படமொன்றின் தமிழ் ஆக்கம். Copy அடித்தததெல்லாம் எங்கட எண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது.
மற்றும் தயாரிப்பாளரே, நான் நிறைவை குறைக்க மாட்டேன்... குறைவானதை கடித்து குதறிவிடுவேன்... பட்டியலை குறைக்கவில்லையே
Post a Comment