Friday, March 31, 2006

அஞ்சலி திரை இரவு


இன்று இரவு New South Wales பல்கலைகழகத்தில் "மஜா" திரைப்படம் காண்பிக்கப் பட்டது. அஞ்சலி தமிழ்ச் சங்கத்தின் இத் திரைப்பட ஒன்றுகூடல் சிறிய அளவில் நடந்தாலும், பல்கலைகழக தமிழ் மாணவரிடையே ஒரு நட்பு ரீதியிலான அறிமுகத்தை ஏற்படுத்தியது. அடியேனும் மலேசியா சிங்கபூர் இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் நம்மட தமிழ் ஆட்களுடன் ஒரு பிரண்சிப் தொடங்கிக் கொண்டேன்.

வேற என்னவென்டா நடுவில டைடானிக் படத்தை தமிழ்ல "டப்" பண்ணி போட்டாங்க, எல்லாரும் சிரிச்சு சிரிச்சு பார்தம். எல்லாரும் கொஞ்சம் பொறுங்க நெட்ல தேடி பிடிச்சு போடுறன்.

அதோட சகோதர பல்கலைகழகங்களில் இருந்து கூட ஆட்கள் வந்தவயல். (இப்பத்தான் நான் லெக்சர் கட் அடிச்சு போய் சந்தோசமா இருகிறது. ரிசல்ட் வரெக்க பார்ப்பம்) ;)


பிற்குறிப்பு: எமது புதிய அங்கத்தவர், லொல்லு1 அவர்களின் முதலாவது பதிவு. அவரை வருக வருக என்று வரவேற்கிறேன். இதில், போஸ்ரர் மட்டும் என்னுடையது. ( போஸரர் அடிச்சு ஒட்டுறதே பிழைப்பாப் போச்சு)

1 comment:

கொழுவி said...

ம்.. நிறையப் பேர் தங்கடை ஜோடிகளோடு போய் தமிழ்த்திரைப்படம் பார்க்க முடியாமல் கிடக்கெண்டும் curries இன்ர தொல்லை தாங்க முடியல்ல எண்டும் நொந்திருந்தவை. அவையின்ர ஆதங்கம் தீர்ந்திருக்கும் எண்டு நினைக்கிறன்..