Wednesday, October 22, 2008

என் இணைய உலகம்

கடந்த ஓர் சில ஆக்கங்கள் சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்துவிட்டன. என்ன செய்வது, எல்லாம் காலத்தின் கோலம். இந்த ஆக்கத்தில் நான் இணையத்திலே அதிகமாக பார்வையிடும் இணையத்தளங்கள் பற்றிய ஒரு அலசல்.

இசையோடு உயிர்வாழும் காரணத்தினாலும் இன்பத்தமிலொலியில் நிகழ்ச்சிகள் செய்வதாலும் புதிய பாடல்களைத் தேடி அலைய வேண்டி இருக்கிறது. உங்களுக்கும ஏதாவது நல்ல இணையப் பக்கங்கள் இருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள். இங்கு, கன்பாராவில் தமி்ழ் கடை ஒன்றுதான் இருப்பதால் இசைத்தட்டுகள் வாங்கமுடியாத நிலையும் நிலவுகிறது. சரி... விசயத்துக்கு வருவோம்.

தமிழ் பாடல்களை இந்தியாவில் வெளியாகியதுமே தரையிறக்கம் செய்ய torrents தான் சரியான வழி. அங்கே வெளியிட்டுக்கொண்டு இருக்கும்போதே இங்கே சுடச்சுட தரையிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பாக www.tamilthunder.com மற்றும் www.tamiltorrents.net இணையத்தளங்கள் நான் அதிகம் பாவிப்பவை. முதலாவக தமிழ்தண்டரில் வேகமாக தரையிறக்கம் செய்யப்படுவதாக உணர்கின்றேன்.

Tamilmp3world, Tamilbeat, Geethams போன்ற இணையத்தளங்களும் நன்றாக செயற்படுகின்றன. இவற்றைத் தவிர நான் பயன்படுத்துகின்ற ஓர் சில இணையத்தளங்களை வலது புறத்தில் பட்டியலிட்டுள்ளேன். உங்களுக்கும் அவை பயனுள்ளவையாக இருக்கும்.

என்னுடைய படிப்புநேரத்தை குழப்புகின்ற ஒரேவிடயம் தமிழ் சினிமா செய்திகளை வாசிக்கின்ற கெட்டபழக்கம். நான் அடிக்கடி விஜயம் செய்கின்ற இணையத்தளங்களையும் தொகுத்துள்ளேன். சும்மா க்ளிக் பண்ணிப்பாருங்கள்.

அறுத்தது போதும், உங்களுக்கும் ஏதாவது நல்ல இணையத்தளங்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள்...