
கனவில்கூட நினைத்துப் பார்க்காத கொடூரம் மும்பை நகரில் அரங்கேறி ஓய்ந்திருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு சற்றே பழகிப்போன விடயமாக இருந்தாலும் உலக ஊடகங்களின் கவனம் இந்த விடயத்தில் ஒரேயடியாக திரும்பியதால் எங்கள் உள்ளங்களையும் கரையவைத்துவிட்ட சம்பவம் என்றே இதனைக் குறிப்பிடவேண்டும். இன்றைய தினம் இந்த அகோர (காட்டு மிராண்டி)தனமான தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன என்ற செய்தி கிடைத்தது. சற்றே நிம்மதியாக இருந்தாலும் மரணித்த காயமடைந்தவர்களை எண்ணி உள்ளம் பதறுகிறது.
இந்தியாவின் வர்த்தக சந்தையாகக் கருதப்படும் முமபை நகரில் யாரும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் இதுவரை 195 பேர் இறந்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 2 அவுஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், இரண்டு பேரைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப்படவில்லை. 6 அமெரிக்கர்களும் இறந்துள்ளார்கள். 295 பேர்வரை காயமடைந்துள்ளார்கள்.
சரி, இவை தகவல்களாக இருந்தாலும், அவுஸ்ரேலிய ஊடகங்கள் கேட்கின்ற கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன. இதனால் என்னுள்ளத்திலே எழுகின்ற பத்துக் கேள்விகள்:
- பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இந்தியர்களை எதிரிகளாக நினைத்தால் வெளிநாட்டவர்கள் வந்து தங்குகின்ற இடங்களை ஏன் குறிவைக்க வேண்டும்? மேலை நாட்டவர்களை குறிவைத்து நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் வழமையாக தலிபான் அமைப்பால் நடாத்தப்படுவதால் இந்தத் தாக்குதலுக்கும் தலபான் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
- வல்லரசுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா இவ்வாறான ஓர் சிறிய விடயத்தில் எவ்வாறு கோட்டைவிட்டது? (இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஈழத்தமிழர்களை குறிபார்த்துத் தாக்குகிறதாமே? )
- கிரிகட்டின் அறிவிக்கப்படாத தலைநகரமாக இருக்கின்ற இந்தியாவில் இனி வெளிநாட்டவர் கிரிகட் விளையாடச் செல்வார்களா? இதனால் கிரிகட் உலகிற்கு என்ன தாக்கங்கள் இடம்பெறப் போகின்றன?
- இந்தியாவில் outsource செய்கின்ற அவுஸ்ரேலிய நிறுவனங்கள் அவற்றை எவ்வாறு தொடரவிருக்கி்ன்றன? இதனால் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றது
- இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் செப்ரெம்பர் 11 தாக்குதல்களுடன் ஒப்பிடப்படலாமா?
- இந்தியாவில் தவித்திருந்த அவுஸ்ரேலியர்களுக்கு ஏன் உடனடி உதவிகள் செய்யப்படவில்லை ?
- இந்தத் தாக்குதலினால் தீவிரவாதிகள் அடைந்த பலன் என்ன? சொல்கின்ற செய்தி என்ன? மக்களைக் கொன்று சந்தோசிப்பவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக எவ்வாறு இருக்கமுடியும்?
- இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட இந்த கொலைவெறியர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். இந்த இளரத்தங்கள் ஏன் வெறியர்களாக மாற்றப்பட்டன? இதுதான் தீவிரவாதமா?
- இலங்கையில் தமிழர்களைக் கொல்வதற்கு துணைபுரியும் இந்திய இராணுவத்தால் அவர்களையே நம்பியிருக்கும் இந்தியக்குடிமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் ஏன் தரமுடியவில்லை?
- 'War against terrorism' என்ற வாதம் உலகில் தீவிரவாதத்தை அடக்கவும் இல்லை, அசைக்கவும் இல்லை. இந்த மாதிரியான வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு என்றுதான் மக்கள் இனம் முடிவு காணப்போகிறது?
5 comments:
பல கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
இது எல்லை தாண்டிய பயங்கரவாதமென்றால், இந்திய கூலிப்படையினர் இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கு உதவுதலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமே
this mumbai attack is nothing compared to Ltte's Anurathapuram attack which was carried out about 20yrs ago..killed about 250+ people within couple of hours with no loss to ltte
Well done LTTE.
//7. • இந்தத் தாக்குதலினால் தீவிரவாதிகள் அடைந்த பலன் என்ன? சொல்கின்ற செய்தி என்ன? மக்களைக் கொன்று சந்தோசிப்பவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக எவ்வாறு இருக்கமுடியும்?//
அன்பின் செந்தூரன் சிதம்பரநாதன்,
இதை விட மோசமாக இலங்கையில் புலிகள் செய்கின்றனர். அதன் பிரதிபலனை இலங்கை தமிழர்கள் அனுபவிக்கிறார்கள் இந்தியாவில் இது புதிது.
மக்களைக் கொன்று சந்தோசிப்பவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக ஒரு போதும் இருக்கமுடியாது.
ஜோ, நன்றி.. இவை நான் மட்டும் கேட்கின்ற கேள்விகள் அல்ல.. அவுஸ்ரேலிய ஊடகங்களும்தான்.. எந்த கேள்விகள் சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கின்றது என்றால் நன்றாக இருக்கும்
வெத்துவேட்டு, மக்களைக் கொல்கின்ற எந்த ஒரு தாக்குதலுமே கண்டிக்கப்பட வேண்டியவையே..
பெயர்தரா நண்பர்களே, இந்திய இராணுவம் செய்வது, செய்தது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
என்னுடைய பாடசாலை நாட்களில் 125ம் அதிகமானவர்களை Church ஒன்றில் இலங்கை இராணுவம் குண்டுவீசிக் கொன்றது ஏன் உலகிற்கு உறைக்கவில்லை?
Post a Comment