
காகத்தின் நிறம் கறுப்பு என்று படித்திருக்கிறோம். கறுப்பு நிறத்தில் காகம் இருப்பதனால் அதனை துன்பத்தின் அடையாளமாக பார்க்கிறோம். ஆங்கிலேயர்களுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உலகிலே வெள்ளைக்காகம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டார் ஒருவர். சரி, Google Searchஇல் தேடிப் பார்ப்போம் என்ற தேடினால் பல விசித்திரமான விடயங்களும் படங்களும் கிடைத்தன. வெள்ளைக்காகம் எம் கண்ணிலேபடுவது அரிது, அவற்றை நீ்ங்கள் கண்டுவிட்டால் உங்களுக்கு விசித்திரமான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புபவர்களும் உண்டு. ஆபிரிக்காவில் வெள்ளைக் கழுத்துடைய Ravens (காகத்தின் ஓர்வகை) இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலும் இப்படியான வெள்ளைக்காகங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் சில ஆராய்ச்சியாளர்கள் வெள்ளைக்காகம் இருப்பதை மறுத்தும் இருக்கிறார்கள்.
White crow என்ற கவிதை, தகவல் சஞ்சிகை ஒன்று வருடத்திற்கு நான்கு தடவைகள் அமெரிக்காவில் பிரசுரிக்கப்படுகின்றது. அத்துடன் வெள்ளைக்காகம் என்பது கவிஞர்கள் பலருடைய சிந்தனைகளையும் தூண்டிவிட்டிருக்கிறது. அதேபோல விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட ஆக்கங்களில் 'வெள்ளைக்காகம்' என்ற வார்த்தை நடக்கமுடியாத விடயங்களை எடுத்துக்காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

காதல் சடுகுடு படத்தில் விக்ரம் சொல்வதுபோல் ' வெள்ளைக்காகத்துடன் குஞ்சும் பறந்தது' என்றால் நம்பத்தான் வேண்டும். நீங்களும் வெள்ளைக் காகத்தைப் பார்த்து இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்.

4 comments:
black swan is a good book you can read
நன்றி Dr Rudhran.
ஆமாம்...வெள்ளை காகத்தை போட்டோவில பார்த்தால் கூட ஏதாவது விசித்திரமா நடக்குமா...சும்மா ஜாலிக்கு கேட்டேன். கருப்பு காகத்தை விட வெள்ளை காகம் அழகா இருக்க மாதிரி தோணுது.
haha... வெள்ளைக்காகம் எம் தாயகத்தில் இலலை... இருந்தால் அதற்கும் சோறு படைத்து நல்ல சகுனம் என்று சொல்லியிருப்போம்... இல்லையா?
Post a Comment