Wednesday, November 19, 2008

காலத்தை வென்ற பாடல்

ஓர் சில பாடல்கள் கேட்கும்போது அவை உள்ளத்தைத் தொட்டுவிடுவதுண்டு. ஒரு திரைப்படம் வந்து பல ஆண்டுகளான பின்பும் அந்தப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது அவை இதயத்தைத் தொட்டால் அவையே காலத்தை வென்ற பாடல்களாகும். அந்தவகையில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படப்பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாகக் கருதப்படலாம்.

கண்டுகொண்டேன் வந்தது யாரென்று கண்டுகொண்டேன் என்கின்ற பழைய ஜெமினிகணேஷன் திரைப்படப்பாடல் வரிகளை இந்தத்திரைப்படத்தின் பெயராக்கியுள்ளார்கள். சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற ஆங்கில நாவலின் தழுவலாக வந்த ஆங்கிலத்திரைப்படத்தை சுட்டு ராஜிவ்மேனன் எடுத்ததிரைப்படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ஆனாலும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் இசைப்புயலின் இசையில் மாபெரும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'சந்தனத் தென்றலை' என்ற பாடல் விருது பெற்றதாக ஞாபகம். ஆனாலும் காதலின் துயரத்தை, சோகத்தை, தாக்கத்தை எடுத்துரைக்கின்ற எங்கே எனது கவிதை பாடலே என்னுள்ளத்தை இன்றைய நாட்களில் கவர்ந்த பாடல். ஓர்நாள் கன்பரா பேரூந்திலே சென்றுகொண்டிருந்தபோது இந்தப்பாடல் என் ipodஇல் ஒலித்தது. பஸ்ஸிலே இருந்து கத்தாத குறை, ஆனாலும் கலாச்சாரம் பார்க்கும் கன்பராவாசிகளை நினைத்து பாடமால் விட்டுவிட்டேன்.

சரி.. விஷயத்திற்கு வருவோம். உயிரை உருக்குகின்ற வைரமுத்துவின் வரிகளை மெச்சுவதா? உணர்வு கொடுத்துப் பாடும் சின்னக்குயில் சித்ராவை பாராட்டுவதா? இடையிடையே சந்தம் சேர்க்கும் சிறினிவாஸை போற்றுவதா? இசையுடன் விடையாடும் இசைப்புயலை வணங்குவதா? ஒவ்வோர் வரியும் இரத்த நாளங்களை கிறங்கடிக்க வைக்கின்றன.

குறிப்பாக,
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
போன்ற வரிகள் காதலின் வேதனையை அழகாக சொல்கின்றன. வைரமுத்துவை மிஞ்ச இன்னோர் கவிஞன் வருவானா என்பது சந்தேகமே. வந்தாலும் இசைப்புயல் - வைரமுத்து கூட்டணி கிடைத்திடுமா?


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

இதைக் கேட்டு மகிழ..
இங்கே அழுத்துங்கள்

இந்தப்பாடலை பார்த்து மகிழ..
இங்கே அழுத்துங்கள்








3 comments:

Bee'morgan said...

அருமையானதொரு பாடல்.. நல்லதொரு பாடலை மீண்டும் கேட்கத் தூண்டியுள்ளது உங்கள் பதிவு.
//
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
//
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
//
இந்த இரு வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தது..
இரு மழைத்துளிகளுக்கு இடையேயான இடைவெளி.. அப்பப்பா.. எப்படி ஒரு கற்பனை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வைரமுத்துவின் வார்த்தை ஜாலத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்..

Bee'morgan said...

ஒரு சந்தேகம்..
அந்த வரி,
”பிறை வந்தவுடன் ” இல்லையா?

Sen Sithamparanathan said...

இந்தப்பாடலின் ஒவ்வொரு வரியும் அழகுதான். நீங்கள் சொன்ன பின்புதான் புரிகிறது, என்ன அருமையான் வார்த்தைப் பிரயோகம். உடைகின்ற அலையிலே தொலைந்த காதலனை காதலி தேடுகிறாள். இதுவும் அருமையல்லவா?

ம்... பிறை வந்தவுடன்தான் சரியென்று நினைக்கின்றேன். ஆனால் விரையென்றால் வேறு அர்த்தங்கள் இருக்கலாம். சிறினிவாஸ் ஒழுங்காக உச்சரிக்காத வரிகளில் இதுவும் ஒன்று.