தமிழ் வாழ்க....
சிட்னி முருகன் கோயிலில் அவுஸ்ரேலிய கம்பன் கழக அங்குரார்ப்பண நிகழ்வுக்கு போனேன். கம்ப வாரிதி ஜெயராஜ்,கம்பன் கழக முன்னாள் தலைவர் திருநந்தகுமார், டொக்ரர் மனமோகன் உட்பட அருமையாக நடந்தது நிகழ்வு.
மேடையில் முழங்கினார் ஒருவர். தமிழ் அழிகிறது, அசைகிறது, அந்த வானில் மறைகிறது. நல்லாத்தான் பேசினியள்,
ஆனா, போன வருசம், கலாச்சார நிகழ்ச்சி ஒன்ட இங்கிலிசில ஒழுங்கு செய்தது நீங்கதானே?
தமிழ் பிரியரே.....
தமிழ் பிரியர் எண்டு புகழப்பட்ட ஒருவர், அருமையான மனிதர், எளிமையானவர், சமூக சேவகன், ஆனா அவற்ர மகளோட என் அம்மா கடந்த மாதம் பேச வேண்டி இருந்தது. பேசி முடிந்ததும் அம்மாக்கு சரியான கோபம். என்ன நடந்தது எண்டால்:
அம்மா: அப்பாவோட கதைக்கலாமா?
தமிழ்ப் பிரியரின் மகள்: Sorry, I can't speak Tamil.....
தமிழ் பிரியரே, சிரிக்கிறதா? அழுகிறதா?
2 comments:
அட.. ஒஸ்ரேலியாவில இருந்து இன்னுமொருவர்.. வாங்க. வாங்க.. நீங்களாவது என்னை மாதிரி இல்லாமல் பிரியோசனமா எழுதுங்க..
சும்மா காதல் கத்தரிக்காய்களைப் பற்றி எழுதாமல்..
ஏனென்டால் அதுகளைப் பற்றி நான் மட்டும் தான் எழுதுவன்... ஆமா...
வணாக்கம் செந்தூரன் மாமா... நான் ஒரு பாட்டு பாட போறன்.. நிலா நிலா ஓடிவா..
அச்சாப் பிள்ளை நல்லாப் பாடினியள்.. எண்டு சொல்லுங்கோ மாமா..
Post a Comment