Monday, February 13, 2006

மெல்பண் மலரே...


ஐயோ நான் யாரையும் குறிப்பிடவில்லை. கடந்த வார இறுதிக்கு, மெல்பண் போனன். அங்க இருக்கிற கார் number plate எல்லாம் Melbourne the Garden City எண்டு போட்டிருந்தது. அப்பத்தான், உந்த இந்தியன் படப் பாட்டு ஞாபகம் வந்தது. அங்க மலர் இருக்கோ இல்லையோ... நல்ல சனம் இருக்கு.


நாங்க சிட்னில இருந்து, கான்பரா (அவுஸ்ரேலிய தலைநகரம்) சென்று அண்ணாவையும் கூட்டிக்கொண்டு மெல்பண் போனம். ( சுமார் 1000 கிமீ). உள்ளுக்க போனால், e toll தான் எல்லா Motor Wayகளிலும். எங்களுக்கு சிட்னில உதெல்லாம் பழக்கமில்லை. பெரிய கரச்சல். ஆனா, மெல்பண் சனம், நடுச்சாமம் 3 மணிக்கு தொலைபேசில வழிகாட்டிச்சினம். அவர்களுக்கு நன்றிகள்.

நண்பர் பாலா அண்ணாட திருமணத்திற்குதான் போனம். அங்கத்தய சனம் தேவையான உதவிகள் எல்லாம் செய்து தந்திசினம். தங்கிறதுக்கு இடம், தொலஞ்சபோது வீதி காட்டி, இப்பிடி பல உதவிகள். அங்கத்தய ரோடுகள் எல்லாம், நல்ல பெரிசு. கோயில் தேரோடுகிற விதிகள் மாதிரி. அகலம்
.
என்ன பெரிய குழப்பம் எண்டால், பெரிய ரோட்டில போய் கொண்டிருக்கையில் அடிடா U turn என்டு சொல்லுவாங்கள். பெரிய குழப்பம். பிறகு, Red light Camera and Speed Light Camera Warnings ஒண்டும் போட மாட்டினம். கிட்டத்தட்ட ஒவ்வொரு பாலத்திற்கு கீழயும் கமரா இருக்குது. சரியா பயந்து பயந்துதான் ஓடினது. எங்கட சிட்னிக்கு வந்த பிறகுதான் துணிவே வந்தது.

அடிடா U Turn... அசரிரீயோ?

2 comments:

சயந்தன் said...

மெல்பேண் மெல்பேண் தான்.. அரவணைக்கும் மக்கள்.. இங்கை சிட்னியில இரவில திரியும் போது பயந்து பயந்த தான் திரிய வேணும்.. ஒரு திரில் சிற்றி..

Sen Sithamparanathan said...

சிட்னி திரில் சிட்டி... மெல்பன் மலர் சிட்டியாம்... அப்பிடியெண்டால், வீதியெல்லாம் மலர் இருக்குமே?