நான் வைரமுத்துவிடம் சுட்ட எத்தனையோ கவி வரிகள் இருக்கின்றன. சிவனே என்று இருந்தவனை கவிதைபோல் கிறுக்கவைத்தவர் வைரமுத்து. அதனால் அவரிடமிருந்து வரிகளைச் சுடுவது ஒன்றும் பிழையல்ல. மானசீகக் குருவுக்கும் மாணவனுக்கும் இடையில் இந்த உரிமைகூட இல்லாவிட்டால் என்ன? இடையிடையே கண்ணதாசனையும் சீண்டிப் பார்ப்பதுண்டு. என்னைக் கவர்ந்த தமிழ்ப் பாடல் வரிகள் ஓர் சிலவற்றையும் என்னுடைய கவிவரிகள் சிலவற்றையும் தொகுத்து அளித்துள்ளேன். சில பாடல்களைக் கேட்கும்போது அவை எம் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. அழகான தமிழா? பாடுகின்ற இசையா? என்னவென்று தெரியாது. தெரியவும் விரும்புவதில்லை. உங்களுக்குப் பிடித்த வரிகளையும் கருத்துக்களாய் இணைக்லாம், ஒவ்வொரு வரிகளிலும் ஆயிரமாயிரம் நினைவுகள் செறிந்து கிடக்கலாம். சரி, வாசிக்க ரெடியா?...
கடவுள்போல் கவலைகள் இல்லாதவன்...
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ...
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டமுகமோ?
இன்பங்களின் இறப்பு நீ.. துன்பங்களின் பிறப்பு நீ.. இரவுகளில் விழிப்பு நீ.. இளமையின் தவிப்பு நீ..
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்... அந்தி பகல் உன்னருகே நான் வாழவேண்டும்...
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன் கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
காதல் என்பது போதிமரம்... காயம்பட்டால் ஞானம் வரும்... நிலையற்றது வாழ்வுதான் மானிடா... நீ நிகழ்காலத்தை வாழடா...
அலையென்று நினைத்தேன் உன்னை கரையைச் சேரும்வரை... அலையடித்த பின்புதான் உணர்ந்தேன் நீ ஆழிப்பேரலையென்று..
நீ தமிழ் என்றால் நான் பாரதியா ? பாரதிதாசனா ?
ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் உன்னை...
எங்காவது இனி என்றாவது நீ சந்திக்க மறந்தால் நான் என்னாவது?
வாழ்கின்ற வாழ்வு எல்லாம் நீர்குமிழ் போன்றது கண்மணியே !!!
இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்..
பூப்போன்ற என் நெஞ்சு யார் கண்டது... பொல்லாத மனம் என்று பெயர் வந்தது...
இரசனையென்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைக்கண்டோம்.. நானும் அவளும் இணைகையில்.. அன்று நிலா பால்மழை பொழிந்தது..
உன் பூவிழி பார்வைகள் போதுமடி.. என் பூங்கா இலைகள் பூக்குமடி.. உன் காற்கொலுசு ஒலிகள் போதுமடி.. பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி...
என்னைக் கொஞ்சம் உறங்கவைத்தால் வணங்குவேன் தாயே....
நீ முடிந்த பூவில் ஒரு இதழாய் வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ வரும்போது நான் மறைவேனா?
கம்பன் வரைந்த ஓவியம் நீ... அவன் தூக்கியெறிந்த தூரிகை நான்...
உந்தன் விழிகள் அழும்போது எந்த விரலும் துடைக்காது.. நேற்றை மறப்போம்... நாளை ஜெயிப்போம்... என்றும் ஜெயித்திருப்போம்...
ஒரு பக்கம் எரியுதடி... ஒரு பக்கம் குளிருதடி... சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்...
விடியல் வேண்டுமா இரவுகளை எரித்துப்பார் !!!
உனக்கும் பொழுது போகணும்... எனக்கும் பிழைப்பைப் பார்க்கணும்... கொஞ்சம் அழுது தீர்க்கணும்... நெஞ்சைத் தொடுகிற ராகம் இது..
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா?
மோகனமே உன்னைப்போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளை கொண்டு போனதில்லை
காலம் மாறும்போது நீயும் மாறக்கூடாதா? எந்தன் கவிதைக் கனவே கரையாதோ உன் உள்ளம் ?
கரையாவதும் நுரையாவதும் அலையாவதும் உன் சொல்லில் உள்ளதடி...
எனது இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி...
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு நான் சிரிக்காத நாள் இல்லையே
சொல்வது குறைவு செய்வது அதிகம்... செயல் புயல் நானடி.. வாஜி வாஜி சிவாஜி..
உயிர் விடும்போதும் உன் குரல் கேட்டால் மரணம் முக்தி பெறும்
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை
பழையராகம் மறந்து பறந்ததென்ன பிரிந்து... இரவுதோறும் அழுது என்னிரண்டு கண்ணும் பழுது...
வார்த்தைகளால் காதலித்தேன்... ஜாடைகளால் சாகடித்தாய்... மழைதான் கேட்டேன் பெண்ணே... இடி மின்னல் தந்தாய் கண்ணே...
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
நெஞ்சம் துடித்திடும் ராணி... நீயோ அடுத்தவன் தோழி... என்னை மறந்துபோவதும் நியாயமோ?
பெண்கள் கையில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம் உண்மை கண்டேன் பெண்ணே உன்னால்...
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே... உன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே...
சட்டைமீது பட்டாம்பூச்சி முட்டும்போது வெறுத்தவன் விட்டுவிலகி போகும்போது விரல் நீட்டித் துடிப்பதோ?
மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை... நம்பிக்கையை...
அழுகிறேன் தொழுகிறேன் எனைக்கண்டு நானே...
ஒருநாள் ஒருநாள் என்றே தினமும் போகும் மறுநாள் வருவாள் என்றே இரவில் இதயம் சாகும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!!இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை இறப்பேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
உதவாதொரு தாமதம் உடனே விழி தமிழா!!!
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்னோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
சாதனைகள் படைத்த நெஞ்சமடி வேதனையால் நெஞ்சு கெஞ்சுதடி
கடைசித்தமிழன் பசியைப்போக்க சதையை அறுத்துத்தருகிறோம்
இரத்தத்தில் கலந்து சித்தத்தில் புதைந்த தமிழே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
இரத்தத்தில் கசிந்து சித்தத்தில் புதைந்தவள் நீ...
என்மீது யாரும் கல்லெறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
புதிதாகப் பிறந்திட நான் புத்தன் இல்லை வழிவிடு
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே
போகும்வழியில் நீ வந்தால் போதையுண்ட பேதையாய் சாகும்வரை உன்வழியில் சரித்திரங்கள் எழுதுமவரை
ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதானே கண்ணா.. ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதானே கண்ணா..
ஆம்ஸ்ரோங்க கண்டா அலறும் அந்த நிலா நிலா நிலா!!! ஜொள்ளுவிட்டு நிக்க நான் சுள்ளான் அல்ல சுறா சுறா சுறா!!!
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண்மனது என்னவென்று புரியவில்லையே
நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா ? பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா ?
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாரும் இல்லை எனக்காகத்தான்
கண்ணிரண்டில் நான்தான் காதலெனும் கோட்டை கட்டிவைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக்கேட்கும் எப்படிச்சொல்வேன் உதிர்ந்துபோன மலரின் மெளனமா ?
பாலும் கள்ளும் நிறத்தால் ஒன்று நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
சொல்லவந்தேன் சொல்லிமுடித்தேன் நீ வரும்திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்...
என் கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா ? என் காதோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா ?
காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் நெஞ்சம் என்னை நினைக்கும்
பூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே பூமாலை அழகே கண்கள் தீட்டிய கவிதையே
வியர்க்கின்ற போதும் நாம் வியக்கின்ற தேகம் விடிந்தாலும் கூட விடியாத தேசம்...
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ அறிந்தால் போதும்
என் தேவியே... நானும் செய்த குற்றமென்ன கூறு... ஒரு பார்வை பாரு...
சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால் காதல் யுத்தத்தினால் எனது ரத்தத்தினால் கவிதை எழுதிவைத்தேன் தோழி இருகண்ணிருந்தால் வாசித்து போடி
நன்றி