Friday, September 22, 2006

ஆணிவேர்


ஆணிவேர் என்ற திரைப்படம் அண்மையில் ஈழத்திலே வெளியிடப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு.. http://www.tamillink.ch/ உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படங்களை இயக்கிய மகேந்திரனின் மகனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தத் திரைப்படம், தமிழீழத்தின் வெள்ளித்திரைப் படமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 27, 2006

மீண்டும் வணக்கம்

நீண்ட நாட்களின் பின் மீண்டும் இந்த இணையப்பதிகளை ஆரம்பித்திருக்கிறேன். இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா சென்று வந்தேன். என் பயணத்தைப்பற்றி நிறைய எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போது என் மனக்கணணிணைத் தட்டிவிடுகிறேன். கடந்த வாரம் நடைபெற்ற இன்பத்தமிழ்ஒலியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் அப்துல் ஹமீதுடன் எடுத்த ஓர் சில படங்களை வெளியிடுகிறேன்.

நான் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன்

நான், பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம்

பாலசிங்கம் பிரபாகரன், ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் அப்துல் ஹமீது

அப்துல் ஹமீது மற்றும் எழுத்தாளர் களுவாஞ்சிக்குடி யோகன்

Tuesday, June 13, 2006

கனடா வன்முறை இங்கு வருமா???

கனடா வன்முறை இங்கு வருமா???என்னை அண்மையில் பாதித்த சில வீடியோக்கள் இங்கு. இவற்றை மேலோட்டமாக பார்க்கும் பொழுது கூட கனடாவில் இளையொர்கள் மீது வன்முறை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் பார்க்கலாம். இங்கு அவ்வாறு மோசமான நிலை இல்லை எனினும் வெகு விரைவில் தொடங்கலாம் எனப் படுகிறது. பொதுவான சமூக ஒன்று கூடும் நிகழ்வுகளில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டது கண்கூடு. ( நமக்கேன் வீண் வம்பு மிச்சத்தை நீங்களே கேட்டு தெரின்ஞ்சு கொள்(ல்)ளு(லு)ங்கொ!)

"This movie intend to communicate an anti-violence message to the community by showing the causes and consequences of youth violence. An increase on the spat of This movie intend to communicate an anti-violence message to the community by showing the causes and consequences of youth violence. An increase on the spat of violence related to Tamil gangs has been on the rise. Thus promoting numerous questions as to the reasons behind this trend. Therefore, a group of youth gathered to find ways to communicate the causes and consequences of violence to the youth and adults. A solution, ..."

Track

Short Film

Saturday, April 08, 2006

குழந்தைக் குளியல்


நான் சி்ன்ன பிள்ளையாக இருக்கும்போது இப்பிடித்தான் குளிப்பனாம். பலருடைய வேண்டுகோளுக்கு இணங்க இணையத்தில் மேலேற்றம் (upload) செய்திருக்கிறேன்.

இன்று showerஇல் குளிப்பவர்களே, அன்றைய நாட்களில் என்னைப்போலதான் குளித்திருப்பீர்கள். இப்பிடிக் குளித்தால், தலைமயிரும் உதிராது. தண்ணியும் சேமிக்கலாம்.

நன்றி: நான் எந்த websiteல சுட்டனோ, அந்த websiteக்கு

Sunday, April 02, 2006

Chellam I luv u da ! ;)

நான் முன்பு குறிப்பிட்ட அந்த டைடானிக் தமிழ் மொழி மாற்றம்

Friday, March 31, 2006

அஞ்சலி திரை இரவு


இன்று இரவு New South Wales பல்கலைகழகத்தில் "மஜா" திரைப்படம் காண்பிக்கப் பட்டது. அஞ்சலி தமிழ்ச் சங்கத்தின் இத் திரைப்பட ஒன்றுகூடல் சிறிய அளவில் நடந்தாலும், பல்கலைகழக தமிழ் மாணவரிடையே ஒரு நட்பு ரீதியிலான அறிமுகத்தை ஏற்படுத்தியது. அடியேனும் மலேசியா சிங்கபூர் இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் நம்மட தமிழ் ஆட்களுடன் ஒரு பிரண்சிப் தொடங்கிக் கொண்டேன்.

வேற என்னவென்டா நடுவில டைடானிக் படத்தை தமிழ்ல "டப்" பண்ணி போட்டாங்க, எல்லாரும் சிரிச்சு சிரிச்சு பார்தம். எல்லாரும் கொஞ்சம் பொறுங்க நெட்ல தேடி பிடிச்சு போடுறன்.

அதோட சகோதர பல்கலைகழகங்களில் இருந்து கூட ஆட்கள் வந்தவயல். (இப்பத்தான் நான் லெக்சர் கட் அடிச்சு போய் சந்தோசமா இருகிறது. ரிசல்ட் வரெக்க பார்ப்பம்) ;)


பிற்குறிப்பு: எமது புதிய அங்கத்தவர், லொல்லு1 அவர்களின் முதலாவது பதிவு. அவரை வருக வருக என்று வரவேற்கிறேன். இதில், போஸ்ரர் மட்டும் என்னுடையது. ( போஸரர் அடிச்சு ஒட்டுறதே பிழைப்பாப் போச்சு)

Sunday, March 26, 2006

Common Wealth Games

இன்றைய தினம் நடைபெற்ற மெல்பண் Common Wealth Games 2006இன் நிறைவு நிகழ்வில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். ஐஷ்வர்யா ராய், ராணி முகர்ஜி, சோனு நிகாம், ஸ்ரேயா கோஷல் போன்றோர் கலந்து கொண்டார்கள். Common Wealth Games 2010 இந்தியாவில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்பு நிகழ்வு அரங்கேறியது.

ஆனால், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்க, ஒரு தமிழ் கலைஞன் கூட அழைத்து வரப்படவில்லை. தமிழும் இந்தியாவிலேதானே தோன்றியது, தமிழுக்கு தாயகம் தமிழகம் தானே?... தமிழர்கள் என்றால் அங்கிகரிக்கப்படத் தேவையில்லாதவர்கள் கேவலமானவர்கள் என்ற எண்ணமே அந்த நிகழ்வின் மூலம் நிருபிக்கப்பட்டது.

கலாச்சார வளம் கொழிக்கும் தமிழர்களின் ஒரு கலைவடிவம் கூட அரங்கேற்றப்படவில்லை என்பதும் மனதைத் தாக்குகிற ஓர் விடயம். இந்தியா, கலைகளின் களஞ்சியம் என்று விளம்பரப்படுத்தப்பட்டபோது தமிழ் என்ற வாசனையே அதிலிருந்து அகற்றப்பட்டிருப்பது, தமிழுக்கான புறக்கணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இது என் கருத்து. உங்கள் கருத்து என்ன? நீங்களும் பின்னூட்டத்தில் அறியத் தாருங்கள்.

Saturday, March 18, 2006

பட்டியல் திரைப்பார்வை


இப்பத்தான் பட்டியல் படம் பார்த்தேன். இணையத்தில் முதல் முறையாக, சுடச்சுட ஒரு பட விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆசை. (ஆசைகள் எத்தனை? இது என்ன கறுமமான ஆசையோ?) அதான் சுடச்சுட... இதோ பட்டியல் திரை விமர்சனம்.

பிதாமகன், தளபதி, சோலே போன்ற படங்களின் பாதிப்புடன் உருவாகி இருக்கும் திரைப்படம் இது. இரண்டு நண்பர்கள், ஆதரவு அற்றவர்கள். ஒருவர் காது கேட்காதவர். பேசவும் முடியாதவர் (பிதாமகன் விக்ரம் போல). மற்றவர் நகைச்சுவையான, ஆனால் ஆண்மைத்துவமான இளைஞன். இவர்கள் வாழ்வில் இரண்டு பெண்கள்( பூஜா மற்றும் 'தவமாய் தவமிருந்து' புகழ் பத்மபிரியா) ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்பதை அழகாக காதல், நட்பு என்ற போர்வையில் செதுக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன்( 'அறிந்தும் அறியாமலும்' இயக்குனர்).

இந்தப் படத்திலேயே, சிறந்தது என்றால் இசை. யுவன் உண்மையிலேயே இளைய இசைஞானிதான். குறிப்பாக, இளையராஜாவின் குரலையே போதை ஏற்றி கொண்டாட விட்டிருக்கிறார். "நாயகன்" திரைப்படத்தில் வந்த "நிலாவது வானத்து மேல" பாடல் பாணியில், "நம்ம காட்டில பாட்டும்" அருமை. "கண்ணை விட்டு கண்ணிமைகள் விடை கேட்டால்" "ஏதேதோ எண்ணங்கள் வந்து" பாடல்கள் எமை மெய்மறந்து சிலிக்க வைக்கின்றன. திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும், ரீங்காரம் இடுகின்றது திரைப்படத்தை இயக்குனர் நிறைவு செய்த விதம். பட்டியல் உண்மையில் சுத்தியல்.( என்ன சுத்தியல் எண்டு கேக்கிறீங்களா?... விமர்சனம் எழுதினா, இப்பிடி ரைமிங்கா முடிக்கிறதுதான் ஸ்ரைல்.)

Thursday, March 16, 2006

அட....

அட... என்ன இது தலையங்கம் எண்டு யோசிக்கிறிங்கள். சும்மா, சொந்தப்படம் எண்டு சொல்லி கொஞ்ச நாளா படம் காட்டிக் கொண்டிருந்தனான். இண்டைக்கு உருப்படியா எதாவது எழுதுவம் எண்டு யோசிக்கிறன்.

இப்ப, சிட்னில பல்கலைக்கழக மாணவர்களின் மனப்பான்மையைப் பார்த்தால், ஒரு இந்தியன் Society எண்டு சொல்லி கலாச்சாரத்த வளர்க்கிறதா சொல்லி "Cultural Night" எண்டு நாலஞ்சு டான்சும் கொஞ்ச தண்ணி + டான்ஸ் பாட்டிகளும் வைத்தால்... "அட... " எண்டு பார்ப்பினம். ( இப்ப தலையங்கம் விளங்குதா?)

அதே நேரம், தமிழ்ச்சங்கம் எண்டால் ஏண்டா நாயே எண்டு கூட பார்க்க ஆக்கள் இல்லாமல் இருக்குது. ஏனெண்டால், நாங்கள் கலாச்சார நிகழ்வை கலாச்சார நிகழ்வாக வைக்கிறோம். தண்ணி பாட்டி வைக்கிறது இல்ல. அதான் எங்கட நிலமை. எத்தனை எங்கட தமிழ் பிள்ளைகள் இந்திய சங்கங்கள் எண்டு அலையுதுகள், ஏன் தமிழ்ச் சங்கம் எண்டால் அவ்வளவு குறைவா? குறிப்பாக, இங்க சிட்னில, தமிழ் வளர்க்கிறம் எண்டு கத்திக் கொண்டு நாடகங்களும் நடத்தி புத்தகமும் வெளியிடுற ஆக்கள்ட பிள்ளைகள்தான் இந்த இந்திய சங்கங்கள்ல கூட இணையுறது.

என்ன பிரச்சினை எண்டால், தமிழ்ச் சங்கத்தில் இருந்தால் தங்களயும் "FOB" (FRESH OFF THE BOAT) எண்டு கூப்பிடுவினமோ எண்ட தாழ்வு மனப்பான்மை. தரித்திரம் பிடிச்ச தமிழன்ட தாழ்வு மனப்பான்மை, எப்பதான் போகப் போகுதோ?

தண்ணியடிச்சாத்தான் மதிப்பு எண்டு நினைக்கிற இன்றைய தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை என்னதான் செய்யுறது?

Friday, March 10, 2006

சொந்தப் படம்

நான் சொந்தமாக எடுத்த படம்

நீலவண்ண செயற்கை மலர்கள் பச்சை இலைகளுடன் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன, துன்பமும் இன்பமும் போல. தத்துவம் நல்லாயிருக்கா?

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க? உங்கள் கவித்திறனையும் கற்பனைத்திறனையும் காட்டுங்கள்.

Thursday, March 02, 2006

திருமணமா? தமிழ்மணமா?

சிட்னி பல்கலைக்கழக ஆரம்பநாளில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள். திருமணம் போல் களைகட்டுகிறது சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம். சுமார் எண்பது அங்கத்தவர்களை இணைத்துள்ளார்கள். UTS தமிழ்ச் சங்கத்தின் சார்பில் என் வாழ்த்துக்கள்.

Monday, February 27, 2006

என்னைக் கவர்ந்தது

ஆண்கள் எல்லாம் பாவம் என்பது இதுதானோ?

என்னைக் கவர்ந்த ஒன்று:

Thursday, February 23, 2006

அட...என்ன உலகமோ...

கொஞ்ச நாளுக்கு முன்னால் tamil rappers பற்றி கொஞ்சம் காரமா விமர்சிச்சனான். இப்பத்தான் SujeethG ய பற்றி ஒரு செவ்வி கேட்டேன். சயந்தன்ட பக்கத்தில. அருமை. நல்லாக ரப் பண்ணுகிறார். தமிழ் வரிகள் கேட்பதற்கு அருமையாக இருக்கின்றன. நீங்களும் போய் பாருங்க... SujeethG
தமிழ் எங்க தழைத்தாலும் வாழ்த்தவும் வேணும்தானே...

அத விடுங்கோ... வாழ்த்தியாச்சு... இனி வீழ்த்துவம்.

இந்த பெட்டையள் ஸ்ரைலா உடுத்திற்று படம் பார்க்க எண்டால் வந்திடுவினம். ஒருமுறை, ஒரு மருத்துவ வகுப்பு ஒண்டு இருக்கு. வாங்கோ எண்டு அழைப்பு விடுத்தனான். அதுவும் இலவசமாக அரசாங்கம் நடத்துற நிகழ்ச்சி. ஒருத்தி கூட வரல. இது கலியுகம் எண்டு வைரமுத்து சொன்னது சரிதான் போல இருக்கு.

Wednesday, February 22, 2006

சிரிக்கவா? சிந்திக்கவா?


நேற்று நாங்கள் படமொன்று பார்க்க போயிருந்தோம். அப்போது நகைச்சுவைலயாக சிரிப்பவர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஒருவர் சொன்னார்: என்னோட நண்பர் ஒருவர் "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" எண்டு சிரிப்பார். பார்க்கும் போதே நகைச்சுவையாக இருக்கும்.

மற்றவர் சொன்னார்: அட... நீ கூட சிரிக்கும்போது நகைச்சுவையாகத்தான் இருக்கும். ஒருக்கா... சிரிச்சுக் காட்டன் எங்களுக்கு.

முதலாமவர்: நான் கோமாளிகள் கூட இருந்தாத்தான் சிரிப்பன்.

இரண்டாமவர்: (ஹா...ஹா....ஹா...ஹா...ஹா எண்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.) நானும் அப்பிடித்தான்.

என்ன விளங்கைல்லயா? பக்கத்தில இருந்த எனக்கும் தான் முதல்ல விளங்கல்ல... ஆனா... விழுந்து விழுந்து சிரிச்சன்.. ஏனெண்டா... Joke சொன்னா சிரிக்கத் தெரியோனும்.

Friday, February 17, 2006

அறிவுக்களஞ்சியம்

வெளிநாட்டில் வாடைக்காற்று வீசுகிறது. (அது சரி, வாடைக்காற்று என்றால் என்ன?... நல்ல வார்த்தை, பாவிச்சிட்டன், விடுங்கோ...)

அவுஸ்ரேலிய இன்பத்தழிழொலியில் அறிவுக்களஞ்சியம் என்னும் நிகழ்ச்சி 200வது வாரத்தை கொண்டாடுகிறது. திரைப்படங்களின் வெற்றிவிழாக் கொண்டாடும் தழிழர்கள் இப்படியான நிகழ்ச்சிகளையும் கண்டுகொள்வார்களா?

2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை வெற்றி நடைபோடுகிறதென்றால் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். அதை நடத்திக்கொண்டிருக்கும் கானா பிரபாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அவருடைய தனிப்பக்கம்... http://www.kanapraba.blogspot.com/ பாருங்க....

Wednesday, February 15, 2006

என்னை கவர்ந்தவர்...





ஆங்கில செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட ஒன்று என்னைக் கவர்ந்தது. அது....

It's not for me to tell the crowd how to treat a player, but he's a fantastic bowler and people should probably realise they won't always have the chance to watch a player of that quality."

Steve Waugh on Muttiah Muralitharan

இதில யாரை பிடிக்கும் எண்டு கேக்கிறியளா? மற்றவர்களைக் கூட புகழக் கூடிய மனமும் மற்றவர்களுக்கு உதவும் மனமும் கொண்டவரைத்தான்.

நீ எனக்காக அழவேண்டாம்

எதை நீ கொண்டு வந்தாய் எதை நீ கொண்டு செல்வதற்கு? பிறந்த பொழுதும் அழுகின்ற மானுடா, இறக்கும் வரையில் அழுகை ஏனடா?

உண்ண உணவில்லை என்று அழு, உடுக்க உடையில்லையா? அழு. அதை விட்டு, தலைவலிக்கும் தேவையில்லாத சோகங்களுக்கும் அழுவதும் ஏன்? ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.

அட... என்ன அட்வைஸ் எண்டு நினைக்கிறீங்களா?சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Monday, February 13, 2006

மெல்பண் மலரே...


ஐயோ நான் யாரையும் குறிப்பிடவில்லை. கடந்த வார இறுதிக்கு, மெல்பண் போனன். அங்க இருக்கிற கார் number plate எல்லாம் Melbourne the Garden City எண்டு போட்டிருந்தது. அப்பத்தான், உந்த இந்தியன் படப் பாட்டு ஞாபகம் வந்தது. அங்க மலர் இருக்கோ இல்லையோ... நல்ல சனம் இருக்கு.


நாங்க சிட்னில இருந்து, கான்பரா (அவுஸ்ரேலிய தலைநகரம்) சென்று அண்ணாவையும் கூட்டிக்கொண்டு மெல்பண் போனம். ( சுமார் 1000 கிமீ). உள்ளுக்க போனால், e toll தான் எல்லா Motor Wayகளிலும். எங்களுக்கு சிட்னில உதெல்லாம் பழக்கமில்லை. பெரிய கரச்சல். ஆனா, மெல்பண் சனம், நடுச்சாமம் 3 மணிக்கு தொலைபேசில வழிகாட்டிச்சினம். அவர்களுக்கு நன்றிகள்.

நண்பர் பாலா அண்ணாட திருமணத்திற்குதான் போனம். அங்கத்தய சனம் தேவையான உதவிகள் எல்லாம் செய்து தந்திசினம். தங்கிறதுக்கு இடம், தொலஞ்சபோது வீதி காட்டி, இப்பிடி பல உதவிகள். அங்கத்தய ரோடுகள் எல்லாம், நல்ல பெரிசு. கோயில் தேரோடுகிற விதிகள் மாதிரி. அகலம்
.
என்ன பெரிய குழப்பம் எண்டால், பெரிய ரோட்டில போய் கொண்டிருக்கையில் அடிடா U turn என்டு சொல்லுவாங்கள். பெரிய குழப்பம். பிறகு, Red light Camera and Speed Light Camera Warnings ஒண்டும் போட மாட்டினம். கிட்டத்தட்ட ஒவ்வொரு பாலத்திற்கு கீழயும் கமரா இருக்குது. சரியா பயந்து பயந்துதான் ஓடினது. எங்கட சிட்னிக்கு வந்த பிறகுதான் துணிவே வந்தது.

அடிடா U Turn... அசரிரீயோ?

Thursday, February 09, 2006

குருபார்வை 2



தமிழ் பெடியள் இருக்கிற சித்திரத்துக்குள்ள HiPHoP பாடல்கள்ல மோதிக்கொள்கிறார்கள். சிரிக்கிறதா? அழுகிறதா? பெரிய 2 PaC, 50 CenT எண்டு நினைப்பு. GanG, FiGHTஸ் over music. What the hell are you trying to achieve? யாரைப் பற்றி கதைக்கிறன் எண்டு நினைக்கிறிங்களா? ஓர் சில உதாரணங்கள்...

Bad Squad... WEBSITE: http://www.badsquad.com/
akniputhraa: WEBSITE:
http://www.i-bands.net/audiovault/bands/1425/news.php

நீங்களும் போய் பாருங்க... என்ன கறுமமோ?

Monday, February 06, 2006

குறைகளும் குரைப்பதும்

ஏதாவது உருப்படியாய் செய்யத் தொடங்கினால், குறை கண்டு பிடிக்கிறது எங்கட ஆக்களுக்கு கற்கண்டு சாப்பிடுற மாதிரி. கதம்பமாலை எண்டு ஒரு நிகழ்ச்சி செய்தம். சரி, தொடர்ந்து படியுங்கோ....

குறை 1: கலாச்சார நிகழ்வில பட்டிமன்றம் வைச்சது பிழை... (கடவுளே ...)

குறை 2: ஆங்கில மோகம் அதிகம்... ( ஒரு டான்சில ஆங்கில பாட்டு சேர்த்ததுக்கு)

குறை 3: இலங்கை நிகழ்ச்சிகளுக்கு கிட்டயும் வராது (உண்மையாவா?...)

அட என்னத்தா சொல்வேனுங்கோ..... அடி நெஞ்சு எரியுதுங்கோ.....

குருபார்வை 1

தமிழ் வாழ்க....

சிட்னி முருகன் கோயிலில் அவுஸ்ரேலிய கம்பன் கழக அங்குரார்ப்பண நிகழ்வுக்கு போனேன். கம்ப வாரிதி ஜெயராஜ்,கம்பன் கழக முன்னாள் தலைவர் திருநந்தகுமார், டொக்ரர் மனமோகன் உட்பட அருமையாக நடந்தது நிகழ்வு.

மேடையில் முழங்கினார் ஒருவர். தமிழ் அழிகிறது, அசைகிறது, அந்த வானில் மறைகிறது. நல்லாத்தான் பேசினியள்,

ஆனா, போன வருசம், கலாச்சார நிகழ்ச்சி ஒன்ட இங்கிலிசில ஒழுங்கு செய்தது நீங்கதானே?

தமிழ் பிரியரே.....


தமிழ் பிரியர் எண்டு புகழப்பட்ட ஒருவர், அருமையான மனிதர், எளிமையானவர், சமூக சேவகன், ஆனா அவற்ர மகளோட என் அம்மா கடந்த மாதம் பேச வேண்டி இருந்தது. பேசி முடிந்ததும் அம்மாக்கு சரியான கோபம். என்ன நடந்தது எண்டால்:

அம்மா: அப்பாவோட கதைக்கலாமா?
தமிழ்ப் பிரியரின் மகள்: Sorry, I can't speak Tamil.....

தமிழ் பிரியரே, சிரிக்கிறதா? அழுகிறதா?

Saturday, February 04, 2006

என்ன சொல்லுறது?

என்ன சொல்லுறது? சிட்னில நடக்கிறதுக்கள பார்த்திட்டு சிரிக்கிறதா, அழுகிறதா...

நேற்றுதான் கோயிலுக்குப் போனான். அங்க முருகன் நல்ல அழகாக இருக்கிறார். ஆனா, வாற சனம் கும்பிட வருதா இல்லை கொசிப்படிக்க வருதா? சந்தேகமாக இருக்கு.

ஒருத்தர் சொல்லுறார்: சிட்னில பெட்டைகளுக்கு கலாச்சாரம் தெரியல மச்சான்.
மற்றவர் சொல்லுறார்: உண்மைதான். சேலைல திரியிற பெட்டைகளை காணகிடைக்கிதில்லை,

அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?

கிருஷ்ணா

எதோ எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத தெரியும்.. கடவுளிடம் கடன் கேட்கிறேன்.. மனிதன் ஆகிவிட்டேனே..


குழந்தை மனம் வேண்டுமடா கிருஷ்ணா
குலையாத நிலையதன மனம் வேண்டுமடா
அழும்போது தெளிவு வேண்டுமடா கிருஷ்ணா
அழுகையும் ஆனந்த கண்ணீராக வேண்டுமடா

தொல்லையற்ற தூக்கம் வேண்டுமடா கிருஷ்ணா
தொய்வற்ற பொய்யற்ற தோழமை வேண்டுமடா
இல்லையென்று சொல்லா மனம் வேண்டுமடா கிருஷ்ணா
இடர்களை எதிர்கொள்ளும் இதயம் வேண்டுமடா

எதிரியையும் வாழ்த்திட வேண்டுமடா கிருஷ்ணா
எண்ணங்கள் விண்ணையும் விஞ்சிட வேண்டுமடா
கதியற்றோர் குறை தீர்க்க வேண்டுமடா கிருஷ்ணா
கவலையற்ற உலகினை கொஞ்சிட வேண்டுமடா

தூய்மையான தாய்மை வேண்டுமடா கிருஷ்ணா
துன்பத்திலும் புன்னகைக்கும் நெஞ்சம் வேண்டுமடா
பொய்மையற்ற தூய்மை வேண்டுமடா கிருஷ்ணா
பொழுது வந்ததும் போகின்ற உயிர் வேண்டுமடா

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்

இது என்னுடைய பக்கம். நேரம் இருந்தால் நினைத்ததை வடிக்க வழியமைத்த இணையத்திற்கு நன்றிகள்.